மாமியாரை வைத்து புரட்சி செய்யும் பாக்கியா.. தீராத கோபத்துடன் பழி தீர்க்க தயாராகிய கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கடந்த ஒரு வாரமாக தாத்தாவின் மரணம் பலரையும் துக்கப்படுத்தி கண்ணீரில் மிகவும் ஆழ்த்தி விட்டது. அத்துடன் கோபிக்கு மிகப்பெரிய தண்டனையாக அப்பாக்கு செய்ய வேண்டிய எந்த காரியத்தையும் செய்யக்கூடாது என்று ஈஸ்வரி முட்டுக்கட்டை போட்டு விட்டார்.

அதனால் வீட்டிற்கு வந்த மருமகளாக இருக்கும் பாக்கியா மகளாக அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும் என்று உறவினர்கள் முன்னாடி ஈஸ்வரி சொல்லிவிட்டார். இதனால் மாமியார் மாமனாருக்காக பாக்கியா, மகளாக மாறி தாத்தாவிற்கு செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்து வீட்டுக்கு திரும்பி விட்டார்.

ஒட்டுமொத்த கோபத்தையும் பாக்கியா மீது வைத்த கோபி

வீட்டிற்கு திரும்பிய பிறகு அனைவரும் தாத்தாவை நினைத்து அழுது வேதனைப்படும் பொழுது செல்வி தான் அங்கே இருந்து ஒவ்வொருவருக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார். ஆனாலும் எல்லோரும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்கும் பொழுது தாத்தா கடைசியாக பேசிய விஷயங்களை நினைத்து பார்த்து கொள்கிறார்கள்.

பிறகு ஒவ்வொருவரும் சோகமாக இருக்கும் நிலையில் தனியாக தூங்க வேண்டாம் என்று வீட்டிற்குள் அனைவரும் சேர்ந்து தூங்குகிறார்கள். அடுத்த மறுநாள் பாக்கியா வழக்கம் போல் வேலை பார்ப்பதற்கு தயாராகிய நிலையில் மாமனாரின் நினைவுகள் அவரை விட்டு போகாமல் அவர் இருந்து பாக்கியா என்று கூப்பிடுவது போல் அவருக்கு ஒரு பிம்பமாக தெரிகிறது.

உடனே தாத்தா இருக்கும் அந்த சேரில் பக்கத்தில் இருந்து அழுது மாமனாரின் நினைவுகளை கொண்டு ஃபீல் பண்ணுகிறார். இதையெல்லாம் கடந்து ஒவ்வொருவரும் பழைய நிலைமைக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரும்பும் போது ஈஸ்வரி பொட்டு இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறார்.

இதனை பார்த்த இனியா, உங்களை இப்படி பார்ப்பதற்கு நன்றாக இல்லை பாட்டி என்று சொல்கிறார். உடனே பாக்கியா நீங்கள் இப்படி இருந்தா மாமாவுக்கே பார்க்க பிடிக்காது. அதனால் எப்பொழுதும் போல பொட்டு வைத்து இருங்கள் என்று போட்டு வைத்து புரட்சியை பாக்யா செய்கிறார்.

இதனை தொடர்ந்து கோபி ராதிகா வீட்டிற்கு திரும்பிய நிலையில் அப்பாவை நினைத்து ஒரு பக்கம் கோபி அழுதாலும் இன்னொரு பக்கம் செய்ய வேண்டிய எந்த ஒரு விஷயமும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து பீல் பண்ணி அழுது துடிக்கிறார்.

இருந்தாலும் அம்மா செய்தது சரியே இல்லை என்று சொல்லிய நிலையில் ராதிகாவும் எங்குமே நடக்காத ஒரு கொடுமை உங்களுக்கு நடந்திருக்கிறது. ஆனால் அங்க வச்சு எதுவும் பேச முடியாத ஒரு சூழ்நிலையில் நான் வாயை மூடி கொண்டேன். தயவு செய்து இதெல்லாம் மறந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வாங்க என்று சொல்கிறார்.

ஆனால் கோபி, இதுக்கெல்லாம் காரணம் அந்த பாக்கியா தான். அவளை நான் சும்மா விட மாட்டேன். இனி கொடுக்கிற ஒவ்வொரு அடியையும் தாங்க முடியாமல் இருக்கும் இடம் தெரியாமல் போகப் போகிறாள் என்று பழிவாங்கும் உணர்வுடன் தீராத கோபத்தை காட்டி வருகிறார்.

அத்துடன் இத்தனை நாளாக என் பிள்ளைகளை பார்க்கும் ஒரு அம்மாவாக நினைத்து பாவப்பட்டேன். இனி அந்த தயவு தாச்சியம் கூட கிடையாது. என்கிட்ட ஏன் வம்பு வைத்தோம் என்று நினைக்கும் அளவிற்கு நான் கொடுக்கும் அடி மிகப்பெரிய அடியாக இருக்கும் என்று வன்மத்துடன் கோபி பேசுகிறார். அந்த வகையில் இனி பாக்யாவிற்கு தொடர்ந்து கோபி டார்ச்சர் கொடுப்பது போல் தெரிகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News