செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கோபியை களித்திங்க ஜெயிலுக்கு அனுப்பிய பாக்கியா.. அவமானப்பட்டு லாக்கப்பில் இருக்கும் சைக்கோ, துடிக்கும் வாரிசுகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இந்த ஒரு நாளுக்கு தான் இத்தனை நாளா காத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கேற்ப பாக்கியா சிங்க பெண்ணாக சீறி விட்டார். பாக்கியா மீது வன்மத்தை கொட்ட வேண்டும் என்பதற்காக ஹோட்டல் சாப்பாட்டில் கலப்படத்தை செய்தது கோபி தான் என்று ஆனந்த் மூலம் பாக்யாவிற்கு ஆதாரம் கிடைத்து விட்டது.

அந்த வகையில் கோபியிடம் வெறும் வாய்சவால் மட்டும் பாக்கியா விட்டு வரவில்லை. இதற்கு அடுத்தபடியாக ஆனந்தை கூட்டிட்டு நேரடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி ஆதாரத்துடன் கோபி மீது தவறு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார். அந்த அடிப்படையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து கோபியை கூட்டிட்டு போக ராதிகா வீட்டிற்கு போலீஸ் வந்து விட்டார்கள்.

அங்கே ராதிகா, மயூ அனைவரும் இருக்கும் பொழுதே கோபி அரெஸ்ட் ஆகி போலீஸ் ஜீப்பில் ஏறிவிட்டார். இதை பாக்யா அவருடைய வாசலில் நின்று கெத்தாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் செழியன், அப்பா லாக்கப்புக்கு போகிறார் என்று ஈஸ்வரிடம் சொல்லி கோபியை பார்த்து பேச துடித்துவிட்டார்.

ஆனால் இனி யார் என்ன நினைத்தாலும் பாக்யாவின் ஆட்டத்தை தடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப கோபியை வசமாக லாக் பண்ணி விட்டார். இதுதான் கோபிக்கு சரியான பதிலடி என்பதற்கு ஏற்ப சைக்கோ தனமாக நடந்து கொண்ட கோபிக்கு பாக்கியா சரியான தண்டனை கொடுத்துவிட்டார். அந்த வகையில் சாப்பாட்டின் அருமை என்ன என்று புரியாத கோபிக்கு ஜெயிலுக்கு போன பிறகு களி தின்னும் பொழுது புரியவரும்.

இதனை தொடர்ந்து பாக்கியா அடுத்தடுத்த வெற்றியை நோக்கி போராடி நிச்சயம் ஒரு தொழிலதிபராக வளர்ந்து காட்டுவார். இதற்கிடையில் பாக்கியாவின் பிள்ளைகள் என்னதான் கோபி பக்கம் சாய்ந்தாலும், வீட்டிற்கு வந்த மருமகளும் சரி மாமியாரும் பாக்கியாவிற்கு பக்கபலமாக இருப்பதால் இனி பாக்யாவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

- Advertisement -

Trending News