புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கோபியை ஜெயிலுக்கு அனுப்ப குடும்பத்துக்கு எதிராக நிற்கும் பாக்கியா.. ராதிகா எடுக்கப் போகும் அதிரடி முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி செய்த தவறுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக பாக்கியா போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டார். ஆனாலும் கோபி ஜாமீன் மூலம் வெளியே வந்து விட்டார். வெளியே வந்தாலும் பாக்யாவை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.

அத்துடன் ராதிகாவை பற்றி தவறான விஷயங்களாக செய்தி மூலம் வந்ததால் ஆத்திரமடைந்த கோபி நேரடியாக பாக்யா வீட்டிற்கு போய் சண்டை போட ஆரம்பித்து விட்டார். அத்துடன் பாக்கியாவும் எதற்கும் நான் இறங்க மாட்டேன் பயப்படவும் தேவையில்லை என்பதற்கு இருப்ப கோபி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஈடு கொடுத்து விட்டார்.

இதை தான் பாக்யாவிடம் இருந்து எதிர்பார்க்கும் என்பதற்கு ஏற்ப கோபியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார். ஆனாலும் பாக்கியா பேசும் பொழுது செழியன் மற்றும் ஈஸ்வரி, கோபியை தடுக்காமல் பாக்யாவை மட்டும் தடுக்கிறார்கள். இருந்தாலும் கோபியும் மொத்த கோபத்தை காட்டும் விதமாக உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்று பழிவாங்கும் விதமாக பேசிவிட்டார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்கியா, நீங்க செய்த தப்புக்கு தண்டனை கொடுக்கும் விதமாக நிச்சயம் நான் உங்களை ஜெயிலுக்கு அனுப்பாமல் விடமாட்டேன் என்று சவால் விட்டார். இதை கேட்ட கோபி அப்படியே நான் ஜெயிலுக்கு போனாலும் திரும்பி வந்து உன்னை நான் சும்மா விட மாட்டேன் என்று ஆளுக்கு ஆள் சண்டை போட ஆரம்பித்து விட்டார்கள்.

இதையெல்லாம் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் வேடிக்கை பார்த்து வீடியோவையும் எடுத்து செய்தியாக டிவியில் ஒளிபரப்பு செய்து விட்டார்கள். பிறகு வீட்டிற்குள் போன செழியன் மற்றும் ஈஸ்வரி, பாக்யாவிடம் சண்டை போடுகிறார்கள். இந்த மாதிரி சண்டை போட்டது தப்பு என்பதற்கு ஏற்ப அனைவரும் சேர்ந்து பாக்யாவை திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனாலும் எதற்கும் அசராத பாக்யா, உங்க பிள்ளை சண்டை போடும்போது நீங்க பாத்துட்டு சும்மா தானே இருந்தீங்க. அப்போ உங்களால தடுக்க முடியலையா? என்று கேள்வி கேட்டு நான் இப்படித்தான் என்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று குடும்பத்தை எதிர்த்து பேசும் அளவிற்கு துணிந்து விட்டார். இதை எல்லாம் பார்த்து இனியா, ராதிகாவை பார்த்து நீங்கள் வந்த பிறகு தான் எங்கள் குடும்பத்தில் உள்ள சந்தோசமே போய்விட்டது என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு இனியா சொன்னதையும் கோபி நடந்து கொண்டதையும் யோசித்துப் பார்த்த ராதிகா, இந்த கோபிக்குடன் சேர்ந்து வாழ்வதற்கு தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று அதிரடி முடிவை எடுக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News