வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 14, 2025

செண்டிமெண்டாக பேசிய ஈஸ்வரிடம் கெத்து காட்டும் பாக்கியா.. ராதிகாவிடம் மல்லுக்கு நிற்கும் கோபி, மயூ சொன்ன விஷயம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தன் பிள்ளை மட்டும் தனக்கு வேண்டும் மருமகள் தேவை இல்லை என்று நினைக்கும் ஒரு மாமியாருக்கு சிறந்த பாடம் கற்பிக்கும் விதமாக தற்போது கதை நகர்கிறது. அதாவது கோபி பாக்கியாவை விட்டுவிட்டு ராதிகாவை இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டார். அந்த வகையில் சட்டப்படியும் சரி கோபியின் ஆசைப்படியும் ராதிகா தான் மனைவி.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத ஈஸ்வரி, கோபி தன்னுடனே இருக்க வேண்டும். ராதிகா இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்ற நினைப்பில் ராதிகாவை பலமுறை அவமானப்படுத்தி பேசி இருக்கிறார். ஆனாலும் ராதிகா இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கோபிக்காக எல்லாத்தையும் தாங்கிக் கொண்டார். தற்போது பாக்கியா வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என புரிந்து கொண்ட ராதிகா, வீட்டை விட்டு போகலாம் என முடிவு பண்ணி விட்டார்.

அதன்படி கோபியிடம் நாளைக்கு நீங்க நானு மயு இந்த வீட்டை விட்டு போகப் போகிறோம், தயாராக இருங்கள் என்று சொல்லிவிடுகிறார். உடனே ஈஸ்வரி, போகிறதா இருந்தால் நீ மட்டும் போ எதற்கு என்னுடைய பிள்ளையை கூப்பிடுகிறாய். எனக்கு இருக்குது ஒரே பையன் அவனையும் என்னை விட்டுப் பிரிக்கணும் என்று நினைக்கிறாயா? அவன் இந்த வீட்டிலேயே என் கூட தான் இருப்பான் என்று செண்டிமெண்டாக பேசி அழ ஆரம்பித்து விட்டார்.

உடனே பாக்கியா, அது எப்படி அத்தை இந்த வீட்டில் அவர் இருக்க முடியும். அவருடைய வீடு இது கிடையாது, அவருடைய குடும்பத்துடன் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் எல்லாத்துக்கும் நன்றாக இருக்கும் என்று பாக்கியா கெத்தாக சொல்லி கோபி இந்த வீட்டை விட்டு போகணும் என்று தீர்மானமாக சொல்லிவிடுகிறார்.

பிறகு தனியாக இருக்கும் ராதிகாவிடம் கோபி நாம் எதற்கு இந்த வீட்டை விட்டு போக வேண்டும். நாம் அனைவரும் இந்த வீட்டிலேயே சந்தோஷமாக இருந்து விடலாமே, நன்றாக தானே இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு ராதிகா, எனக்கு நல்லா இல்ல கோபி.

இதே மாதிரி ராஜேஷ் கூட விவாகரத்து ஆன பிறகு நான் அதை வீட்டில் இருக்கிற ஒரு சூழ்நிலை வருகிறது. அத்துடன் நீங்களும் அந்த வீட்டுக்கு வந்து இருக்க வேண்டும் என்று உங்களை அங்கே கூட்டிட்டு போய் இருக்க வச்சா உங்களுக்கு எப்படி இருக்கும். அதை பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா, இதெல்லாம் என்ன வாழ்க்கையை கோபி. நமக்கென்று நமக்கு ஒரு வீடு இருக்கிறது அங்கே போய் இருக்கலாம் என்று தானே கூப்பிடுகிறேன்.

அத்துடன் நீங்கள் என்னுடன் வந்து விட்டால் உங்க வீட்டுக்கு வரக்கூடாது உங்க அம்மாவிடம் பிள்ளைகளிடம் பேசக்கூடாது என்று நான் என்னைக்குமே சொன்னதே இல்லை, அப்படி சொல்லவும் மாட்டேன். ஆனாலும் ஏன் கோபி என்னை புரிந்து கொள்ள மாட்டிக்குங்க என ராதிகா கோபியை பார்த்து கேட்கிறார்.

அதற்கு கோபி நீ என்னதான் சொன்னாலும் நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் நீயும் போகக்கூடாது என்று திரும்பத் திரும்ப அதையே சொல்லி மல்லு கட்டுகிறார். உடனே ராதிகா நான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை நாம் மூன்று பேரும் நாளைக்கு கிளம்புகிறோம் அவ்வளவுதான் என்று சொல்லி போய் விடுகிறார். க

டைசியில் ராதிகாவிடம் மையு சொல்லப்போவது டாடி இங்கேயே இவங்க கூட சந்தோசமாக இருக்கட்டும் நாம் போகலாம் என்று சொல்லப் போகிறார். அதன்படி ராதிகா கோபியை விட்டுவிட்டு மயூவை கூட்டிட்டு தனியாக சந்தோஷமாக வாழ போகிறார்.

Trending News