திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ராதிகா வீட்டு கதவை தட்டும் பாக்கியா.. ICU இல் சீரியஸாக இருக்கும் கோபி, இறுதி அத்தியாயத்தில் பாக்கியலட்சுமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தனக்கு அமைந்த வாழ்க்கை சரி இல்லை என்று நினைத்து கோபி, அவரே ஒரு வாழ்க்கை துணையை அமைத்துக் கொள்ளும் விதமாக ராதிகாவை கல்யாணம் பண்ணிக் கொண்டார். ஆனால் அதன் பிறகு தன்னுடைய முதல் குடும்பம் என்ன நிலைமையில் இருக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்காத அளவிற்கு சுயநலமாக இருந்தார்.

இருந்தாலும் கோபி செய்த நம்பிக்கை துரோகத்தை பெருசாக நினைக்காமல் பாக்யா தன்னுடைய புகுந்த வீட்டிற்கும் பிள்ளைகளுக்காகவும் போராட தொடங்கினார். அதன் வழியாக ஒவ்வொரு வெற்றியும் பார்த்த பாக்யாவை பார்த்து கோபி பொறாமை பட ஆரம்பித்தார். இதனால் கோபி அவருடைய சந்தோஷத்தை மறந்து விட்டு ஒவ்வொரு நிமிஷமும் பாக்யாவை பற்றி யோசித்து பழிவாங்க முயற்சி பண்ணினார்.

கடைசியில் எல்லாம் போச்சு என்பதற்கு ஏற்ப ராதிகாவை கல்யாணம் பண்ண பிறகு சந்தோஷத்தையும் இழந்து பாக்கியா குடும்பத்தையும் கஷ்டப்படுத்தி தற்போது நெஞ்சுவலியால் உயிருக்கு போராடும் விதமாக கோபி துடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி, ராதிகா மாமியார் பசங்க என அனைவருக்கும் கால் பண்ணி உதவி கேட்கிறார்.

ஆனால் யாருமே எடுக்காத பட்சத்தில் வேறு வழியே இல்லாமல் பாக்கியாவிற்கு கால் பண்ணுகிறார். ஆனால் பாக்யா, கோபி போன் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் போனை அட்டென்ட் பண்ணி பேசுகிறார். அப்பொழுது நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருக்கிறேன் என்னை காப்பாற்று என்று சொல்லிப் போனை வைத்து விடுகிறார். உடனே பதறிப் போன பாக்கியா, செழியன் கதவை தட்டி பார்க்கிறார்.

ஆனால் செழியன் தூங்கிய நிலையில் நேரடியாக ராதிகா வீட்டிற்கு போய் கதவை தட்டுகிறார். ஆனால் ராதிகா கதவு திறக்காத நிலையில் அங்கு நின்று கொண்டு ராதிகாவிற்கு ஃபோன் பண்ணி பார்க்கிறார். ஆனால் ராதிகாவின் போன் சுவிட்ச் ஆஃப் என்பதால் வேறு வழியில்லாமல் பாக்யா காரை எடுத்துக்கொண்டு கோபி இருக்கும் இடத்திற்கு போய் விடுகிறார்.

பிறகு கோபி இருக்கும் நிலைமையை பார்த்து ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுகிறார். ஆம்புலன்ஸ் வந்ததும் கோபியை அதில் ஏற்றி பாக்கியா கூடவே ஹாஸ்பிடலுக்கு போகிறார். பிறகு எழிலுக்கு தகவலை சொல்லி ஹாஸ்பிடலுக்கு வர சொல்லுகிறார். அத்துடன் காலையில் விஷயம் கேள்விப்பட்டு ஈஸ்வரி, செழியன், இனியா அனைவரும் ஹாஸ்பிடல் வந்து விடுகிறார்கள்.

கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால் ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார்கள். ஆனால் அதற்கு பாக்யா கையெழுத்து வேண்டும் என்று கேட்ட நிலையில் பாக்கியா, ராதிகாவுக்கு போன் பண்ணி வர சொல்கிறேன். இதில் அவங்க தான் கையெழுத்து போடணும் என்று சொல்கிறார். இதை கேட்டதும் கோபப்பட்ட ஈஸ்வரி அதுவரை என் பிள்ளை உசுரு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கணுமா? இப்போ நீ கையெழுத்து போட்டா என்ன என்று கேட்கிறார்.

அந்த வகையில் கோபியை காப்பாற்ற வேண்டும் என்பதால் ஆபரேஷன் பண்ணுவதற்கு பாக்யா கையெழுத்தை போட்டு விடுகிறார். பிறகு இந்த விஷயத்தை கேள்வி பட்டதும் ராதிகாவும் வந்துவிடுவார். ICU இல் சீரியஸாக இருக்கும் கோபி சரியானதும் ஒட்டுமொத்த குடும்பத்துடன் மன்னிப்பு கேட்டு கோபி திருந்தி விடுவார். அத்துடன் இந்த நாடகத்திற்கும் இறுதி அத்தியாயத்தை கொண்டு வரும் விதமாக பாக்கியலட்சுமி சீரியலுக்கு பூசணிக்காய் உடைக்க போகிறார்கள்.

- Advertisement -

Trending News