புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மருமகளுடன் சந்தோஷமாக இருக்கும் பாக்கியா.. மீண்டும் ஆனந்தை வைத்து காய் நகர்த்தும் கோபி, வெளிவரும் உண்மை

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் சேர்ந்து பாக்யா மற்றும் ஈஸ்வரியை தனியாக கூட்டிட்டு வந்து இன்று ஒரு நாள் எல்லா கவலைகளையும் மறந்து நாம் நான்கு பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அத்துடன் சமீபத்தில் நடந்த கசப்பான விஷயங்களையும் மறந்து மனசுக்கு பிடிச்ச எல்லா விஷயத்தையும் செய்து இன்னைக்கு நமக்கான நாளாக என்ஜாய் பண்ணலாம் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.

அதன்படி பிடித்த உணவுகளை ஆர்டர் பண்ணி சாப்பிட்டு, கடற்கரைக்கு போவது, ஊஞ்சல் விளையாடுவது, கேரம்ஸ் விளையாடுவது போன்ற அனைத்திலும் சந்தோசமான தருணத்தை கொஞ்சம் கொஞ்சமாக என்ஜாய் பண்ணி வருகிறார்கள். வீட்டிற்கு இப்படி ஒரு மருமகள் இருந்தால் குடும்பம் நிச்சயம் சந்தோசமாக இருக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஜெனி மற்றும் அமிர்தா மாமியாருக்கு ஒரு மறக்க முடியாத நாளாக கொடுத்து விட்டார்.

ஆனால் இதையெல்லாம் தொடர்ந்து வீட்டிற்கு வரும் பாக்யாவிற்கு அடுக்கடுக்காக பிரச்சனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது செழியன் மற்றும் இனியா என்னதான் பாக்கியா உடன் இருந்தாலும் முதல் முக்கியத்துவம் கோபிக்கு தான் என்பதற்கு ஏற்ப கோபி பக்கம் சாய்ந்து விட்டார்கள். இதனை அடுத்து மீதம் இருப்பது எழில்தான்.

இவரையும் கவுக்கும் விதமாக தயாரிப்பாளர் மூலம் கோபி பிளான் பண்ணிவிட்டார். அதாவது எழில் எடுக்க போகும் படத்தின் பூஜைக்கு பாக்யாவை வரவிடாமல் தடுக்க வேண்டும். தன்னுடைய பிள்ளையின் சந்தோஷத்தை கண்குளிர பார்க்க கூடாது என்பதற்காக கோபி தயாரிப்பாளரிடம் கூறியிருக்கிறார். அதன்படி தயாரிப்பாளர் இந்த விஷயத்தை எழிலிடம் சொல்லி பாக்யாவை வரவிடாமல் தடுத்து விடுவார்.

இது மட்டும் இல்லாமல் ஹோட்டலில் மறுபடியும் மக்களின் நம்பிக்கையே சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பாக்யா ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து சமைத்து கொடுக்கிறார். அந்த வகையில் தீபாவளி பரிசாக சில ஆஃபர்களை கொடுத்து அதன் மூலம் பொதுமக்களை ஹோட்டலுக்கு வர வைக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

ஆனால் இதையும் சொதப்பும் விதமாக கோபி, அனுப்பின ஆனந்த், பாக்கியா ஹோட்டலில் இருக்கும் ஸ்வீட்டுகளில் கலப்படம் பண்ணப் போகிறார். ஆனால் இந்த முறை பாக்யா உஷாராகி நிச்சயம் அந்த கருப்பு ஆடு யாரு என்பதை கண்டுபிடிக்கும் விதமாக ஆனந்த் தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்கிற உண்மையை வெளிக்கொண்டு வரப் போகிறார்.

அத்துடன் ஆனந்துக்கு பின்னாடி இருந்து காய் நகர்த்துவது கோபி தான் என்கிற விஷயத்தையும் பாக்கியா கண்டுபிடித்து விடுவார். இதன் மூலம் பிள்ளைகளும் கோபியை வெறுப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையப்போகிறது. கடைசியில் கோபி போட்ட கணக்கு அனைத்தும் தவிடு பொடியாக்கும் வகையில் பாக்யா ஜெயித்து காட்டப் போகிறார்.

- Advertisement -

Trending News