பொங்கல் பண்டிகையில் சிறு பட்ஜெட் மற்றும் அதிக பொருட்செலவில் தயாரான ஆறு அல்லது ஏழு படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் ‘பைரவா’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’, ‘புரியாத புதிர்’ ஆகிய 3 படங்கள் மட்டுமே வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறு பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் அவை திரைக்கு வருவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ்-கிர்த்தி கர்பண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘புரூஸ்லி’ படமும் பொங்கல் ரேஸில் இருந்து விலகி பிப்ரவரியில் ரிலீசாகிறது.

‘பைரவா’ பொங்கல் ட்ரீட்டாக 12ம் தேதியே திரைக்கு வர உள்ளது. அன்று ஒரே நாளில் தமிழகத்தில் அதிகளவிலான (சுமார் 450) திரையரங்குகளில் ‘பைரவா’ வெளியாக உள்ளது. இதன்மூலம் முதல்நாள் வசூலில் ‘கபாலி’, ‘வேதாளம்’, ‘தெறி’ படங்களின் வசூலை ‘பைரவா’ முந்த வாய்ப்பு உள்ளது.

‘பைரவா’-வை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கும் ‘புரியாத புதிர்’ ஜனவரி 13-ம் தேதியும், பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ 14-ம் தேதியும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.