விக்ரமின் காலை வாரிவிடும் பயில்வான் விமர்சனங்கள்.. அப்படி படம் எடுக்க தெரியலன்னா எப்படி 80 கோடி கலெக்ஷன்.?

Vikram: விக்ரம் நடிப்பில் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தங்கலான் படம். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பை விக்ரம் கொடுத்திருக்கிறார். இப்படம் கிட்டத்தட்ட நான்கு நாட்களிலேயே 80 கோடி வசூல் செய்திருந்தது.

இந்த சூழலில் படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி இருந்தனர். ஆனாலும் நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து சிலர் பரப்பி வருகின்றனர். விக்ரமின் படத்திற்கு மட்டும் தான் இவ்வாறு நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்களுக்கு வெற்றி விழா கொண்டாடி வருகிறார்கள்.

அதுவும் சரியாக ஓடாத படங்களில் வெளியான மறுநாளிலேயே சக்சஸ் மீட்டும் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஒன்னும் சொல்லாத பயில்வான் ரங்கநாதன் இப்போது விக்ரமின் தங்கலான் படத்தை விமர்சித்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் பாப்பனர்களை பா ரஞ்சித் விமர்சித்து இருக்கிறார்.

விக்ரமின் தங்கலான் படத்தை விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்

அவருடைய கற்பனையை காட்ட வேண்டும் என்றால் சொந்த செலவில் படம் எடுத்து இருக்க வேண்டும். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் பணத்தை வீணடிக்க கூடாது என பேசி இருக்கிறார். இவ்வாறு தங்கலான் படத்திற்கு எதிர்மறையான விஷயங்களை பரப்பி வருகிறார்.

அதோடு விஜய், அஜித் போன்ற நடிகர்களால் தங்கலான் படத்தில் நடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் சினிமாவின் ஆரம்பம் தொடங்கி மிகவும் துணிச்சலான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களை மட்டுமே விக்ரம் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கோப்ரா போன்ற சில படங்களின் தோல்வியை அழுத்தமாக சொல்லியே அவரை வளர்ச்சி அடையாமல் பின்னுக்கு கொண்டு வந்துவிட்டனர். சியான் ரசிகர்களால் மட்டுமே அவர் இப்போதும் படங்களில் உசுரை கொடுத்து நடித்து வருகிறார்.

வசூலை அள்ளிக் குவிக்கும் தங்கலான்

Next Story

- Advertisement -