இளையராஜாவின் மகளுக்கு இருந்த தீராத மன வருத்தம்.. பவதாரிணி பற்றி பேசிய பயில்வான்

Ilaiyaraja – Bhavatharini : நேற்றைய தினம் இளையராஜாவின் மகள் பவதாரணி இறப்புச் செய்தி ரசிகர்களை நிலைகுலைய செய்தது. இசை குடும்பமாக பார்க்கப்படும் இளையராஜாவின் வாரிசுகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரணி ஆகியோரும் இசையிலேயே தங்களது பயணத்தை தொடங்கினர்.

சிறு குழந்தையாக இருக்கும்போது இசையில் மீது உள்ள ஆர்வத்தால் பவதாரணி பாட்டு பாட தொடங்கினார். தனது 47 வது வயதில் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சினிமா விமர்சகர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பவதாரணிக்கு இருந்த மன வருத்தத்தை பற்றி பேசி இருக்கிறார்.

அதாவது கடந்த 2005 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் எஸ்என் ராமச்சந்திரனின் மகன் சபரி ராஜுடன் பவதாரணிக்கு திருமணம் நடைபெற்றது. காதல் திருமணமாக இருந்தாலும் பெற்றோர்களின் சம்மத்துடன் இந்த திருமண நடைபெற்று இருந்தது. ஆனால் பவதாரணி நினைத்தபடி திருமண வாழ்க்கை அமையவில்லை.

Also Read : மயில் போல பொண்ணு மக.. மறைந்த பாடகி பவதாரணி மீளா துயில் கொள்ளும் இடம்

இதனால் கணவரை விட்டு பிரிந்து தனியாக பவதாரணி வாழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக சபரி ராஜுவின் மனைவி என்பதை காட்டிலும், இளையராஜாவின் மகள் என பெருமிதமாக பவதாரிணி வாழ்ந்து வந்தார். ஆனாலும் ஒரு குழந்தை இல்லையே என்ற மனவருத்தம் அவருக்கு இருந்ததாக பயில்வான் கூறியிருக்கிறார்.

ஆனாலும் அவற்றையெல்லாம் வெளியில் காட்டிக்காமல் தொடர்ந்து பாடல் பாடுவதில் ஆர்வம் செலுத்தி வந்தார். அந்த வகையில் பித்தப்பையில் கல் இருப்பதாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அது சிறுநீரகம் வரை பரவிய நிலையில் சிச்சைக்காக இலங்கை சென்றிருந்தார். மருத்துவம் பலனளிக்காமல் பவதாரிணி உயிரிழந்துள்ளார்.

Also Read : இசைஞானியின் இளவரசி பவதாரணி இசையமைத்த 5 படங்கள்.. ரேவதியுடன் சேர்ந்து செய்த தரமான சம்பவம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்