கர்நாடகாவில் ஏற்பட்ட பாகுபலி பிரச்சனை தொடர்பாக நடிகர் சத்யராஜ் தனது பேச்சு கன்னட மக்களை பாதித்து இருந்தால், அதற்கு மனப்பூர்வமாக  வருத்தம் தெரிவித்து இருந்தார்.

அதனை ஏற்க மறுத்த கன்னட அமைப்பினர் பெங்களூரில் பாகுபலி படம் வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி கர்நாடகாவில் முழு பந்த் திட்டமிட்டப்படி நடைபெறும் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் செயலுக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. இன்று நடிகர் கமல் தனது டுவிட்டரில் பாகுபலியின் நெருக்கடியான நேரத்தில் சத்யராஜுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும், நெருக்கடி சூழ்நிலையில் அவர் பகுத்தறிவுடன் சிறப்பாக நடந்து கொண்டதாகவும், ’மன்னிப்புக் கேக்கறவன் பெரிய மனுஷன்’ என சத்யராஜ் செயலுக்கு நடிகர் கமல் பாராட்டியுள்ளார். கமல் ஆதரவுக்கு சத்யராஜ் மகன் சிபிராஜ் உடனடியாக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.