பாகுபலி 2, வரும் 27 ம் தேதி ரிலீஸ். தெலுங்கு பாகுபலி2 சென்சார் ஆகிவிட்டது. U/A சர்டிபிகேட் கிடைத்துள்ளது. போர் காட்சிகள் கொஞ்சம் வயலண்ட்டாக இருந்ததால், ஏ சர்டிபிகேட் கொடுத்து உள்ளார்கள்.

படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 47 நிமிஷங்கள். இதில் 8 நிமிஷம் பாகுபலி 1 ஓடுமாம். கொஞ்சம் படம் அதிக நேரம் ஓடுவது போல இருக்கேன்னு பீல் பண்ணுகிறவர்களுக்கு, படக்குழு, ராஜமௌலி இயக்கம் போரே அடிக்காது. அப்படியே நேரம் போவது தெரியாமல் கட்டிபோட்டுவிடுவார் என்று சொல்லுகிறார்கள்.

இன்னும் மத்த மொழிகளுக்கான சென்சார் வேலைகள் நடந்துள்ளன. சூறாவளி ப்ரோமோஷனில் இறங்கியுள்ளனர்.

பாகுபலி ஹீரோ பிரபாஸ் அடுத்து அட்லீ படத்தில் நடிப்பார் என்று சொல்லுகிறார்கள்.

அனுஷ்க்கா பாகுமதி என்ற ஹீரோயின் ஓரியண்டட் படத்தில் கமிட் ஆகிவிட்டார்.

தமன்னா, கையில் இருக்கும் படத்தை தவிர, வேறு எந்த புது படத்துக்கும் சம்பளத்தை, இந்த படத்தின் ரிலீசுக்கு அப்புறம் தான் சொல்லுவேன் என்று அடம் பண்ணுகிறாராம். சம்பளத்தை ஏற்றத்தான் அவர் ட்ரிக் பண்ணுகிறார் என்று இண்டஸ்ட்ரி பேசுகிறது.

பாகுபலி நடிகர்கள் எல்லோரும் 5 வருட இந்த படத்துக்கான உழைப்புக்கு பின் ஒவ்வொரு திசையில் பயணிக்க ஆரம்பித்து உள்ளனர்.