பாகுபலி 2015ல் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற படம். இந்தியா முழுவதும் தென் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம். இந்த படத்தை ராஜமௌலி இயக்கினார். இப்படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, சுதீப், நாசர் மற்றும் பலர் நடித்தனர். படம் வெளி வந்ததும் அவர்கள் நிஜப்பெயர் மறந்து போகும் அளவிற்கு நிலைமை மாறியது.

இந்நிலையில் இந்த வருடம் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ரிலீசான அணைத்து மொழிகளிலும் ஹிட் அடித்தது இப்படம். பாகுபலி-2 படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ 1000 கோடி தாண்டியது.

Bahubali 2 Poster

சில மாதங்களாகவே இப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய முயற்சித்தும், படத்தை சீனாவில் வெளியிட அனுமதி கிடைத்தபாடில்லை. வரும் 29ம் தேதியன்று இப்படம் ஜப்பானில் ரிலீஸாவது பற்றி நாம் முன்னரே நம் தளத்தில் தெரிவித்திருந்தோம்.


ஜப்பானை பொறுத்தவரை ரஜினிகாந்த்தின் முத்து படத்திற்குப் கிடைத்த வரவேற்பு வேறு எந்த இந்தியப் படத்திற்கும் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. எனவே ஜப்பான் ரிலீஸை பலரும் ஆர்வமாக எதிர்நோக்கி உள்ளனர்.


தற்பொழுது, படத்தை ரஷ்ய மொழியில் டப் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பாகுபலி 2’வின் ரஷ்ய வெர்ஷனின் டிரையிலரை தயாரிப்பாளர் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தை ஜனவரி 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.