bahubali-iifaபாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. தற்போது வரை இதன் 60% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முழுவதும் முடிந்துவிட்டதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் தற்போது இப்படத்தின் தயாரிப்பு தரப்பு இத்தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் இப்படம் 2017-ம் ஆண்டு சம்மரில் திரைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.