எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. உலகம் முழுவதும் இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட சர்வதேச அரங்கில் இப்படம் பல விருதுகளை அள்ளியது. இந்நிலையில் வரும் ஜூலை 22-ம் தேதி இப்படம் சீனாவில் 6000 திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரொமோஷன்நிகழ்ச்சிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.