Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலியின் சாதனையை பந்தாடிய சூப்பர் ஸ்டார்.. கோட்டையின் முதல் செங்கல் உருவப்பட்டது
பிரபாஸ் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருந்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வசூல் சாதனைகளைப் பற்றி நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. உலக சினிமாவையே உற்றுப் பார்க்க வைத்த திரைப்படம்.
வசூல் ரீதியாக மட்டுமின்றி சமூக வலைதளங்கள் மற்றும் டிவிக்களில் ஒளிபரப்பப்படும் டிஆர்பி ரேட்டிங் என அனைத்து சாதனைகளையும் மலையாகக் குவித்து வைத்தது. ஆனால் அத்தகைய சாதனைகளில் இருந்து ஒற்றைச் செங்கலை உறுவியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு.
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். வசூல் ரீதியாக இவரின் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றிகளைப் பெற்று வருகிறது. அந்தவகையில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு மகேஷ்பாபு, ரஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி நடிப்பில் உருவான ‘சரிலேரு நீக்கெவரு’ படம் ஜெமினி டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.
அதில் இதுவரை தெலுங்கு சினிமாவில் டிவியில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் முன்னணியில் இருந்த பாகுபலியின் சாதனையை பின்னுக்குத் தள்ளியுள்ளது இந்தப் படம். பாகுபலி 1 (22.7) மற்றும் 2(21.8) ஆகிய படங்கள் டி ஆர் பி-யில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் வகித்து வந்தன.
ஆனால் மகேஷ்பாபுவின் சரிலேரு நீக்கெவரு படம் பாகுபலி சாதனைகளை முறியடித்து அதிகபட்ச டிஆர்பி 23.4 ரெடிங்ஸ் பெற்று முதலிடம் வகிக்கிறது.
இதனை மகேஷ்பாபு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் பிரபாஸ் ரசிகர்கள் ஊரடங்கு உத்தரவால் தான் இது நடந்தது என மகேஷ்பாபுவை கலாய்த்து வருகின்றனர்.
