பாகுபலி கட்டப்பாவாக முதலில் நடிக்க இருந்தவர் இவரா? என்ன காரியம் பண்ண இருந்தீங்க ராஜமௌலி!

இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் தான் பாகுபலி. அதுவரை ராஜமௌவுலி என்ற இயக்குனர் தெலுங்கில் மட்டுமே பிரபலமாக இருந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்க்கும் அளவுக்கு உயர்ந்தது இந்த படத்தின் மூலம்தான்.

பாகுபலி முதல் பாகம் 600 முதல் 700 கோடி வரை வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா என நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தனர்.

பாகுபலி படத்தில் பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு இணையாக கருதப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் தான். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கினார்.

பாகுபலி இரண்டாம் பாகமும் வசூலில் சக்கை போடு போட்டது. 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவையே தலைநிமிர வைத்தது. இந்நிலையில் பாகுபலி கதாபாத்திரத்திற்கு முதல்முதலாக தேர்வானவர் நடிகர் சஞ்சய்தத் தானாம்.

ஆனால் சஞ்சய் தத் நடித்திருந்தால் கூட பாகுபலி கட்டப்பா கதாபாத்திரம் இவ்வளவு சிறப்பாக வந்திருக்குமா என்பது சந்தேகந்தான். அந்த அளவுக்கு கதாபாத்திரத்தை உள்வாங்கி மிரட்டியிருந்தார் சத்யராஜ்.

கட்டப்பா கதாபாத்திரத்தின் வெற்றியால் சத்யராஜ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மிகப் பெரிய சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.