Connect with us
Cinemapettai

Cinemapettai

drishyam2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் இணைந்த பாகுபலி பிரபலம்.. முரட்டு ஆளுக்கு கிடைத்த முக்கிய கதாபாத்திரம்!

மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் வெளியாகி சமீபத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

திரிஷ்யம் படத்தை விட த்ரிஷ்யம் 2 படம் இன்னும் சிறப்பாக இருந்ததாக கருத்துக்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது மற்ற மொழிகளிலும் திரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் வேலைகளை ஆரம்பித்து விட்டனர். முன்னதாக த்ரிஷ்யம் படம் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் ஆனது குறிப்பிடத்தக்கது.

தமிழிலும் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது முதல் ரீமேக் ஆக தெலுங்கில் திரிஷ்யம் 2 படத்தை ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர். முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் மற்றும் மீனா ஆகியோர் அதே கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

மலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் முரளி கோபி என்பவரின் போலீஸ் கதாபாத்திரம் புதிதாக அமைக்கப்பட்டது. அந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் கூடுதல் தகவல்.

இந்நிலையில் முரளி கோபி நடித்த அதே போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாகுபலி புகழ் ராணா டகுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அவரும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

rana-joins-drishyam2-telugu-remake

rana-joins-drishyam2-telugu-remake

குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் தெலுங்கு த்ரிஷ்யம் 2 திரைப்படம் கோடை காலத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் எப்போது பாபநாசம் 2 என்ற கேள்விகள் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.

Continue Reading
To Top