ரஜினி நடித்த கபாலி படம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் வசூலில் சாதனை செய்து வருகிறது.

இன்னொரு பக்கம் ஜுலை 22ம் தேதி சீனாவில் வெளியான பாகுபலி படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.சுமார் 5000 திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது.

முதல் மூன்று நாட்களில் சீனாவில் ‘பாகுபலி’ படம் ரூ.4 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. ஏற்கனவே இந்த படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.