அட ஆமாங்க பாகுபலி படம் ஒரு மூளை சர்ஜெரி பண்ண உதவி இருப்பது தான் தற்பொழுதைய லேட்டஸ்ட் நியூஸ்.

43  வயதான வினாய குமாரி என்பவருக்கு மூளையில் டுயுமர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நர்ஸ் ஆக வேலை பார்க்கும் இவரை குண்டூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். சர்ஜெரி நடக்கும் பொழுது நோயாளி முழித்துக் கொண்டிருக்க வேண்டும். இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு பிடித்தல் பாடல்கள் பிளே செய்வ்து வழக்கம். ஆனால் வினாய குமாரி பாகுபலி 2  படம் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

bahubali_cinemapettai

எனவே சர்ஜெரியன் பொழுது லேப் டாப்பில் பாகுபலி 2 திரையிடப்பட்டது.

டாக்டர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறுகையில் “இந்த சர்ஜெரியில் நோயாளி துளியும் பதட்டமாகவில்லை, அவர் படத்தின் பாடல்களை ஹம் செய்து கொண்டு இருந்தார்.” என்றார்.

நர்ஸ் வினாய குமாரி கூறுகையில்,” சர்ஜெரி ஒன்றரை மணி நேரம் நடந்தது, இன்னும் கொஞ்ச நேரம் நடந்திருந்தால், முழு படத்தையும் பார்த்திருப்பேன்.” என்றார்.