பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி கடந்த சில நாட்களாக ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி வந்தது.

அதிகம் படித்தவை:  பாகுபலி-2 அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானது

இதற்காக ரூ. 30 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரொமாண்டிக் பாடல் ஒன்று படமாகி வருகிறதாம். இதில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா பங்கேற்றுள்ளனர். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.