மிக பிரம்மாண்டமாக ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என பல பிரபலங்கள் நடிப்பில் சரித்திர படமாக பாகுபலி உருவாகி மிகபெரிய வெற்றி பெற்றது.

முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என பல ட்விஸ்ட்க்கு ரசிகர்கள் 2 ம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

பாகுபலி 2 இல் அனுஷ்கா, பிரபாஸ் நடிக்கும் கிளைமாக்ஸ் 2 போர்க்காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிரவைத்தது.

இது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. தகவல் அறிந்த பாகுபலி 2 படக்குழு உடனே அதை இணையத்திலிருந்து நீக்கிவிட்டு, தீவிர விசாரணையை மேற்கொண்டது.

பெரிய பாதுகாப்பிற்கு நடுவே எப்படி இது நிகழ்ந்தது என கடுமையாக விசாரித்து பின் நம்பிக்கை துரோகம் செய்ததற்காக இதன் வீடியோ எடிட்டர் மீது ஹைதராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு அவரை கைது செய்துள்ளார்கள்.