பாகுபலி முதல் பாகத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது அதே கூட்டணியில் வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாகி வருகிறது.

அதிகம் படித்தவை:  பாகுபலி-3 பிரமாண்ட ப்ளான், தயாரிப்பாளர் இவரா?

இதற்காக ரூ. 30 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமான அரங்குகள் தயாராகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ம் தேதி திரைக்கு வரவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்

இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 1 மணிநேரம் 45 நிமிடங்கள் என தகவல் கசிந்துள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் முதல் பாகத்தை விட இப்படம் ஒரு மணிநேரம் குறைவாக இருக்கும்.