bahubali-part-2-castபிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் ‘பாகுபலி 2’ படத்தில் ‘விசாரணை’ படத்தின் வில்லன் அஜய் கோஷ் நடித்து வருகிறார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்நிலையில் இதே படத்தில் மேலும் ஒரு வில்லன் நடிகர் இணைந்துள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் மில்டன் இயக்கிய ‘கோலி சோடா’ உள்பட பல படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ள வில்லன் நடிகர் மதுசூதனன் பாகுபலி 2′ படத்தின் மெயின் வில்லனாக நடிக்கும் ராணாவின் வலதுகரமாக உள்ள கேரக்டர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், தற்போது ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டுள்ளதாகவும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அதிகம் படித்தவை:  தடைகளை தாண்டி தமிழகத்தில் வெளியாக உள்ள பாகுபலி-2..!

‘பாகுபலி 2’ படத்தின் 30% படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டதாகவும், இவ்வருடம் ஜூன் மாதத்திற்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் இந்த படம் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.