fbpx
Connect with us

Cinemapettai

கட்டப்பாவால் கர்நாடகாவில் கலக்கம் …

Sathyaraj-Karnataka-Baahubali2

News | செய்திகள்

கட்டப்பாவால் கர்நாடகாவில் கலக்கம் …

கட்டப்பாவால் இப்படி பிரச்சனை வரும் என்று பாகுபலி இயக்குனர் ராஜமௌலி நினைத்தே பார்த்திருக்க மாட்டார்.

பாகுபலி 1 ஒரு பிரமாண்ட படமாக அத்தனை பேரையும் அசத்தியது. அந்த முதல் பார்ட்டில் தான் தூக்கி வளர்த்த பாகுபலியை தானே கட்டப்பா கொன்று விடுவார். ஏன் கட்டப்பா கொல்கிறார்? என்ற கேள்விக்கு விடை தான் இப்போது ஏப்ரல் 28 ம் தேதி ரிலீசாக இருக்கும் பாகுபலி 2 ன் கதை.

ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளிவந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை ட்ரைலர் ரிலீஸ் ஆன 24 மணி நேரத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட 7 படங்களில் ஒன்றாக பாகுபலி 2 சாதித்துள்ளது.

அப்படியிருந்தும் கர்நாடகத்தில், பாகுபலி 2 வெளியிட சிக்கல் எழுந்துள்ளது. காரணம், கட்டப்பா.

கட்டப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ் காவிரி பிரச்சனையின் போது, கர்நாடகாவை தாக்கி பேசினாராம். அதனால்,அவர் நடித்த படத்தை ரிலீஸ் பண்ணவிட மாட்டோம் என்று பிரச்சனை பண்ணுகிறார்களாம்.

இதனை சரிசெய்து சொன்னபடி ரிலீஸ் செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது பாகுபலி 2 படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top