எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை ருசித்த படம் பாகுபலி. உலகம் முழுவதும் இப்படம் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தேசிய விருது உட்பட சர்வதேச அரங்கில் இப்படம் பல விருதுகளை அள்ளியது. இதன் இரண்டாம் பாகமும் தற்போது உருவாகி வருகிறது.

இந்நிலையில் பாகுபலியின் முதல்நாள் படப்பிடிப்பு மூன்று வருடங்களுக்கு முன்பு இன்றுதான் நடந்ததாம். இதை தயாரிப்பாளர் ஷோபு டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.