mumbai

mumbai

பெங்களூரு,
பெங்களுருவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் பேட்டிங் செய்து விளையாடியது. ஐ.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெங்களூரு அணி 143 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணி இப்போது பேட்டிங்கில் சொதப்பி வருகிறது.
முதல் மூன்று ஓவர்களுக்குகள் மொத்தம் 7 ரன்கள் மட்டும் எடுத்து இருந்த நிலையில் 4 விக்கெட்களை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தது. பெங்களூரு வீரர் சாமுவேல் பத்ரி ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தினார். சாமுவேல் பத்ரி பார்த்திவ் பட்டேல், ரோஹித் சர்மா, மிச்சல் மெக்லென்கான் விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான பட்லர் பின்னி பந்து வீச்சில் அவுட் ஆனார். இதனையடுத்து 5-வது ஆட்டக்காரராக களமிறங்கிய ரானா 11 ரன்களில் அவுட் ஆனார். 7.6 வது ஓவரில் மும்பை அணி 5 விக்கெட்களை இழந்து இருந்தபோது 33 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இதனையடுத்து பொல்லார்ட், பாண்ட்யா விளையாடி வருகிறார்கள்.
சாமுவேல் பத்ரி வெறும் 9 ரன்களை மட்டும் எடுக்கவிட்டு 4 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.