அமெரிக்காவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு விக்ரம் விருந்தினராக அழைக்கப்பட்டு அங்கு அவரும் சென்றிருந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அதேபோல் அந்த நிகழ்ச்சியில் விக்ரம் ரசிகர்களை அவமதித்ததாக ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் விக்ரம் கலந்து கொண்ட நிகழ்ச்சி நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள், விக்ரம் அவர்கள் அவருடைய பிஸியாக வேலைகளுக்கு இடையில் இந்த நிகழ்ச்சியில் ஒரு நடிகராக இல்லாமல் தமிழனாக கலந்து கொண்டார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அவரை பற்றி வந்த தகவல்கள் அனைத்தும் பொய்யே.

தவறான தகவலை வெளியிட்ட பிரகாஷ் அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளனர்.