புஜாராவின் வீக்னசை கண்டுபிடித்த இங்கிலாந்து.. இனிமேல் அவர் வேலைக்காக மாட்டார்

இந்தியா மற்றும் இங்கிலாந்துதிற்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முழு பலத்துடன் களமிறங்கி இருக்கிறது.

ஆட்டத்தில் ஒன் டவுனில் விளையாடி வரும் புஜாரா தொடர்ந்து தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் டெஸ்டில் ஏற்கனவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் புஜாராவின் அனுபவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்சில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.

மிகவும் பொறுமையாக விளையாடக்கூடிய புஜாராவால் எதிரில் நிற்கும் வீரர்களுக்கு பிரஷர் ஏற்படுகிறது எனவும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் அவர் தனது திறமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கும் வேளையில் அவர் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Pujara1-cinemapettai-1.jpg
Pujara1-cinemapettai-1.jpg

புஜாரா வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங்கில் மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது ஸ்டம்பில் வரும் பந்துகளை எதிர்கொள்ள தடுமாறி வருவதாகவும், துல்லியமான வேகத்தில் பந்து வந்தால் புஜாரா ஆட்டமிழக்கிறார் என்றும் அறியப்படுகிறது. இந்த நிலையில் போனால் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் புஜாராவின் பங்களிப்பு இந்திய அணிக்கு தேவைப்படாது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்