நம் கோலிவூட் சினிமாவிற்கு தான் ஹிட் படங்களின் அடுத்த பார்ட் எடுப்பது புதிய விஷயம். பொறுத்தவரை அவர்கள் பிரான்சேய்ஸ் அல்லது பார்ட் வடிவில் எடுப்பதற்கு திட்டம் போட்டு தான் செயல்படுவர்.

Martin Lawrence Will Smith – bad boys

பேட் பாய்ஸ்

மியாமி நகரின் பின் புலத்தில் நடக்கும் இப்படத்தின் கதை. ஹீரோக்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகள். மார்ட்டின் லாரன்ஸ் மற்றும் வில் ஸ்மித் தான் ஹீரோ. காமெடி கலந்த அச்டின் படம் இது. இப்படத்தின் முதல் பாகம் 1993 இல் வெளியானது. பின்னர் இரண்டாம் பாகம் 2003 ஆம் ஆண்டு ரிலீசானது. ட்ரான்ஸபோர்மேர்ஸ் பட புகழ் மைகேல் பே தான் இரண்டு படங்களையும் இயக்கினார்.

அதிகம் படித்தவை:  அடுத்த 2 மாதங்களில் 3 படங்கள் ரிலீஸ் - கலக்கும் விஜய் சேதுபதி
bad boys

கடந்த 2008 இல் இருந்தே இப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் அது நடைபெறவில்லை. பல இயக்குனர்கள், நடிகர்களின் கால்ஷீட் பிரச்சனை, தயாரிப்பு நிறுவன பிரச்சனை என்று பல குழப்பங்களுக்கு பின் இப்படத்தின் மூன்றாம் பாகம் தற்பொழுது உறுதி ஆகியுள்ளது.

அதிகம் படித்தவை:  நெஞ்சை பதைபதைக்க வைக்கும் 'கண்ணம்மா கண்விழி' - ராட்சசன் வீடியோ பாடல்.
Bad-Boys-3

“பேட் பாய்ஸ் பார் லைப் ” என்று பெயரிடப்பட்டுள்ளது. சோனி பிக்ச்சர்ஸ் நிறுவனம் இயக்குனர்கள் அடில் எல் அர்பி மற்றும் பிலால் பால்லாஹ் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அநேகமாக இவர்கள் இருவரும் இணைந்து இயக்கம் இப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்குவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்கிறார்கள்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

மீண்டும் இந்த இரு ஹீரோக்களின் கூட்டணி இணைந்தால் கட்டாயம் அதிரடி சரவெடி தான் !