fbpx
Connect with us

Cinemapettai

100 அடி தோண்ட வக்கின்றி உன்னை இழந்துவிட்டோம்! சுர்ஜித் உயிரிழப்பு, தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி

India | இந்தியா

100 அடி தோண்ட வக்கின்றி உன்னை இழந்துவிட்டோம்! சுர்ஜித் உயிரிழப்பு, தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி

சுர்ஜித் நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றில் மாட்டிக்கொண்டு உயிரிழந்த சோகம் இந்திய அளவில் மக்களைப் பாதித்து உள்ளது.  இந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு கூட நம்மிடம் முறையான இயந்திரங்கள், பயிற்சியாளர்கள் இல்லை என்று திட்டி தீர்க்கின்றனர் மக்கள்.

ஆனால் நான்கு நாட்களாக இரவு பகலாக உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். சீனாவில் 3 மணி நேரத்தில் இதைப்போன்று விபத்திலிருந்து குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளது.  ஆனால் நம் நாட்டில் இது போன்ற வசதிகள் இல்லை என்பதில் மிகுந்த வருத்தமளிக்கிறது, அல்லது பலவகையான காப்பாற்றும் முறை இருந்தும் நாம் முறையாக அதை பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை.

குழந்தை சுஜித் பலியான விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க உச்சநீதிமன்றம் வகுத்த விதிமுறைகளை பின்பற்ற மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் மக்கள் தங்கள் துயரத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். சுஜித் உயிரிழப்பில் எந்த ஒரு அரசியல் உள்நோக்கம் இல்லாமல் செயல்பட்ட கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

surjith-11

surjith-11

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top