Connect with us
Cinemapettai

Cinemapettai

venba-insta-story-reply

Videos | வீடியோக்கள்

வெண்பாவின் வளைகாப்பு வைரல் வீடியோ.. கணவருடன் வந்து அட்டகாசம் செய்த பாரதி கண்ணம்மா

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற விடும் பிரபலமான சீரியல்தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினிக்கும் வில்லியாக கதாபாத்திரத்தில் வெண்பாவை நடிக்கும் பரினாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது.

இன்னிலையில் வெண்பா நிஜமாகவே கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, எக்கச்சக்கமான போட்டோ சூட்களை நடத்தினார். அதன்பின்பு வெண்பா சீரியலில் இருந்து விலகி விடுவாரோ? அல்லது

சீரியலை வேறு கோணத்தில் உருவாக்கி விடுவார்களோ? என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டபோது, இதற்கு பதிலளித்த வெண்பா, ‘பிரசவத்திற்காக 2 மாதம் பிரேக் எடுத்த பிறகு அதே கதாபாத்திரத்தில் தொடர்ந்து நான் நடித்தேன்; என்று திட்டவட்டமாக பதிலளித்துள்ளார்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வெண்பாவிற்கு வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கண்ணம்மா சீரியலில் நடிக்கும் பாரதி, கண்ணம்மா, அஞ்சலி, அகிலன் அனைவரும் வருகை தந்து விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

அத்துடன் மற்ற சின்னத்திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தனர். ஆகையால் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Continue Reading
To Top