fbpx
Connect with us

Cinemapettai

கோவையில் 7 வயது சிறுமிக்கு நடந்த அவலம்..! துப்பு கொடுத்தால் சன்மானம் போலீஸ் அதிரடி..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோவையில் 7 வயது சிறுமிக்கு நடந்த அவலம்..! துப்பு கொடுத்தால் சன்மானம் போலீஸ் அதிரடி..

கோவையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் துப்பு கொடுத்தால் சன்மானம் கொடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளது. கஸ்தூரி நாயக்கன் புதூர் பகுதியில் குடியிருந்து வந்த பிரதீப் மற்றும் அனிதா இவர்கள் இருவரும் துப்புரவு பணியாளர்கள் ஆக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இதில் 7 வயது பெண் குழந்தை அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தன் படிப்பை படித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் திங்கட்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு அந்த குழந்தை வீட்டில் அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து குழந்தை வீட்டிற்கு வரவில்லை அதனை அடுத்து குழந்தையை தேடி உள்ளனர்.

ஆனால் குழந்தை கிடைக்கவில்லை அதனால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் சில நாட்களாக தேடி வந்துள்ளனர் ஆனால் எந்த ஒரு துப்பும் கிடைக்காததால் போலீசார் திக்குமுக்காடி நின்றனர்.

குழந்தை காணாமல் போன வீட்டின் அருகே ஒரு சிறிய சந்தில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தெரிந்துள்ளது. அதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் அதனை சோதனை செய்தபோது அந்த குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

children

children

இந்த தகவலை அடுத்து, சிறுமியின் தாத்தா உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வந்துள்ளனர். இந்த தகவலை குறித்து போலீசாரிடம் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானமும் அவர்கள் கூறிய ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top