சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

சூர்யவம்சம் படத்தில் நடித்த குழந்தையா இது.. கல்யாணம் ஆகி ஆளே மாறிய புகைப்படம்

சூரிய வம்சம் படத்தின் மூலம் பிரபலமானவர் பேபி ஹேமலதா, இந்த படத்தில் சரத்குமாருக்கு பேரனாக வேஷம் போட்டு இருப்பார். தற்போது வரை பாயாசம் படத்தின் வசனங்கள் மீம்ஸ் கிரியேட் பண்ணவதற்கு உதவியாக உள்ளது.

அது மட்டுமில்லாமல் இதற்கு முன்னதாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் டிவி சீரியல்களில் களம் இறங்கிவிட்டார், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சித்தி’ சீரியலில் பேபி காவிரியாக நடித்திருப்பார்.

பின்னர் தென்றல், விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் போன்ற சீரியல்கள் மூலம் பெண்கள் மனதிலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

கடைசியாக இவர் ‘முந்தானை முடிச்சு’ என்ற சீரியலில் நடித்த பின்பு, தற்போது வரை சினிமாவில் சீரியலில் இருந்து ஒதுங்கி விட்டாராம்.

2006 வரை துணை நடிகையாக வலம் வந்துள்ளார் பேபி ஹேமலதா. தற்போது எப்படி உள்ளார் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர், இவர் திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அவர்தான் உறுதிபடுத்த வேண்டும்.

baby-hemalatha-cinemapettai-1
baby-hemalatha-cinemapettai-1
- Advertisement -

Trending News