fbpx
Connect with us

Cinemapettai

ஆக்ரோஷமான பந்துவீச்சால் பாகிஸ்தான் வீரரின் எலும்பை உடைத்த பென் ஸ்டோக்ஸ் ! வீடியோ உள்ளே !

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆக்ரோஷமான பந்துவீச்சால் பாகிஸ்தான் வீரரின் எலும்பை உடைத்த பென் ஸ்டோக்ஸ் ! வீடியோ உள்ளே !

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்று பயணத்தில் உள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகின்றது. தன் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியை திணறடித்து வருகின்றது பாகிஸ்தான். முதல் இன்னிங்ஸ் ஆடி இங்கிலாந்து 184 ரங்களுக்கு ஆட்டம் இழந்தது. மேலும் இரண்டாவது இன்னிங்சில் 235 / 6 என்று தடுமாறி வருகின்றது.

பாபர் ஆசம்

பாக்கிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 363 ரன்கள் அடித்தனர். நான்கு பேட்ஸ்மேன் அரை சதம் கடந்தனர். இப்போட்டியில் 23 வயதான மத்திய வரிசை பாட்ஸ்மான் பாபர் தான் அதிகபட்சமாக 68 ரன்கள் அடித்தார். எனினும் இவர் ஸ்டோக்ஸ் வீசிய அந்த பந்தை தடுக்கவும் முடியமால், அடிக்கவும் வழி இன்றி தடுமாறினார். அப்பொழுது இவருக்கு காயம் ஏற்பட்டு ரிட்டயர்டு ஹுர்ட் முறையில் வெளியேறினார்.

பின்னர் தான் இவரின் இடது கை மணிக்கட்டில் பிராக்ச்சர் உள்ளது எக்ஸ் – ரேவில் தெரியவந்துள்ளது. சுமார் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் இவர். உலக கிரிக்கெட்டில் பலர் இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். இவர் இந்த தொடரில் விளையாட முடியாமல் போனது, பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top