Connect with us

Cinemapettai

atlee-rajini

Cinema News | சினிமா செய்திகள்

அட்லீயிடம் சிக்கிய பாட்ஷா 2.. இனி தலைவரை யாராலும் காப்பாற்ற முடியாது

தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இவர் நடிப்பில் 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளிவந்த பாட்ஷா திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றையே புரட்டிப் போட்டது.

இன்றைய ஆக்சன் படங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்த படம் என்றால் அது பாட்ஷா மட்டுமே. இந்த கேரக்டரில் ரஜினி தாறுமாறு செய்திருப்பார். இன்றைக்கும் டி.வி-யில் போடும்போது அனைவரும் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் படமாகவும் உள்ளது.

இந்நிலையில் தற்போது பாட்ஷா -2 கதையை தயார் செய்து இருப்பதாக பிரபல தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அட்லி வெளிப்படையாக கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் தற்போது உலகமெங்கும் வசூல் வேட்டை ஆடி வருகிறது.

பாட்ஷா படத்தில் ரஜினிக்கு இணையாக கருதப்பட்ட ரகுவரன் கேரக்டர் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்று. அதை ஒரு பேட்டியில் ரஜினியே, ரகுவரன் இல்லாமல் பாட்ஷா-2 கிடையாது என திட்டவட்டமாக அறிவித்து இருந்தார். மார்க் ஆண்டனியை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top