fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தேசிய விருது பெற்ற படத்திற்கு போஸ்டர் ஒட்டிய மிஸ்கின்.. தர லோக்கலான தரமான சம்பவம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தேசிய விருது பெற்ற படத்திற்கு போஸ்டர் ஒட்டிய மிஸ்கின்.. தர லோக்கலான தரமான சம்பவம்

மிஸ்கின் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை அவரின் படங்கள் அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு போன்வை சாட்சி.சில தினகளுக்கு முன்னதாக வெளிவந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிதி ராவ் நடிப்பில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு வெளிவந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ் பாசிட்டிவாக மாற்றியவர் மிஸ்கின் என்றே கூறலாம்.

அதாவது சிசிடிவி கேமரா எங்கேயும் இல்லையா என்ற சர்ச்சைக்கு மிஸ்கின் பதிலளித்து இருப்பார். தற்போது பாரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மிஸ்கின் இந்த படத்திற்கு நான் போஸ்டர் ஓட்டுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

mysskin

mysskin

அதுமட்டுமில்லாமல் தற்போது உள்ள இயக்குனர்கள் பாரம் படத்தின் இயக்குனரிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாக பேசி இருப்பார். அதேபோல் தற்போது தேசிய விருது பெற்ற பாரம் படம் கடந்த வாரம் வெளிவந்தது அதற்காக மிஸ்கின் தர லோக்கலாக இறங்கி போஸ்டர் ஒட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேறப்பு கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாம். இந்த செயலுக்காக மிஷ்கினுக்கு அந்த படத்தின் இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி மற்றும் படக்குழு நன்றிகளை தெரிவித்து உள்ளது. மிஸ்கின் செய்த செயல் விலைமதிப்பில்லாதது என்று பெருமை படுத்தியுள்ளானர்.

mysskin

mysskin

இதில் ஒரு இயக்குனராக சினிமா மேலுள்ள அளவு கடந்த மோகம் என்றே கூறலாம். சிறந்த படத்திற்கு கிடைத்த தரமான வெற்றி  என்று சினிமா வட்டாரங்கள் புகழ்ந்து வருகின்றனர். ரசிகர்களை தாண்டி ஒரு இயக்குனர் இதைப்போன்று படங்களை வரவேற்பது சினிமாத்துறைக்கு பெரும் ஊக்குவித்தல் என்றே கூறலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top