புதன்கிழமை, நவம்பர் 6, 2024

உச்சகட்ட மகிழ்ச்சியில் பாக்கியா.. எழில் செய்த விஷயம் அப்படி

இல்லத்தரசிகளின் விருப்பமான தொடர் பாக்கியலட்சுமி. வீட்டில் இருக்கும் பெண்கள் பல வேலைக்கு பின்பும் தனக்காக நேரம் ஒதுக்கி வாழ்க்கையில் முன்னேற என்ன செய்யலாம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இத்தொடர் உள்ளது. இத்தொடரில் கதாநாயகியாக உள்ள பாக்கியத்திற்கு பல பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு தொழில் தொடங்கி உள்ளார்.

ஆரம்பத்திலேயே பாக்கியா தொழில் தொடங்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் எழில் மட்டும் பாக்யாவுக்கு உறுதுணையாக இருந்தார். முதலில் சமையல் பொடி மட்டும் தயாரித்து வந்த பாக்கியா பின்பு நிகழ்ச்சிகள், திருமணங்களுக்கு சமைத்துக் கொடுக்க தொடங்கினார். தனது தொழிலை பெரிய அளவில் கொண்டு வர பல முயற்சிகளை செய்து வருகிறார்.

ஆனால் பாக்யாவின் கணவன் கோபி தனது வீட்டில் வேலைக்காக சமைக்க கூடாது என சொல்கிறார். இதனால் பாக்யாவின் மாமா, பாக்கியா சமைப்பதற்காக புது வீடு ஒன்று பார்க்கிறார். நிறைய வேலை ஆட்கள் கொண்டு சமைப்பதற்கு இந்த வீடு போதுமானதாக இருக்கும் என்பதால் பாக்கியா சம்மதம் தெரிவித்து அட்வான்ஸ் கொடுக்கிறார்.

பாக்யாவின் தொழிலை மேம்படுத்த விளம்பரங்கள் தேவை என எழில் கூறுகிறார். இதனால் பாக்கியாவை வைத்து வீடியோ ஷூட் செய்கிறார் எழில். வீட்டில் எல்லோரும் அமர்ந்திருக்கும்போது பென்டிரைவ் மூலம் டிவியில் பாக்யாவின் வீடியோவை எல்லோருக்கும் காட்டுகிறார். ஈஸ்வரி ஃபுட், ஈஸ்வரி மசாலா, ஈஸ்வரி கேட்டரிங் என அனைத்திற்கும் எடுக்கப்பட்ட விளம்பர வீடியோக்களை எழில் போட்டு காண்பிக்கிறார்.

அந்த வீடியோவை பார்த்து குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆச்சரியம் அடைகிறார்கள்.
பின்பு அனைவரும் பாக்கியாவையும், எழிலையும் பாராட்டுகிறார்கள். எழிலின் தாத்தா, அந்த வீடியோவை மீண்டும் போடு என்று முதலில் இருந்து பார்க்கிறார். பல சிக்கல்கள் வந்தும் விடாமுயற்சியால், எழிலின் உதவியுடன் பாக்கிய தொழிலில் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார்.

- Advertisement -spot_img

Trending News