Connect with us
Cinemapettai

Cinemapettai

baakiyalakshmi-serial

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புத்தம்புது சீரியலில் களமிறங்கும் பாக்கியலட்சுமி பிரபலம்.. எகிறப் போக்கும் டிஆர்பி ரேட்டிங்

விஜய் டிவியில் டிஆர்பி முன்னிலை வகுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவின் இரண்டாவது மகனாக முன்பு செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆரியன் அந்த சீரியலில் இருந்து விலகி புத்தம்புது சீரியலில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஆரியன் ஒரு காலத்தில் ஓஹோன்னு ஓடிக்கொண்டிருந்த செம்பருத்தி சீரியலின் கதாநாயகி ஷபானாவை பெற்றோர்களின் மீறி திருமணம் செய்து கொண்டார்.

ஷபானா முஸ்லிம், ஆரியன் ஹிந்து என்பதால் அவர்களது வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்காததால் நண்பர்கள் உதவியோடு மிகவும் எளிமையான முறையில் தங்கள் திருமணத்தை நடத்திக் கொண்டனர். அதன் பிறகு ஆரியன்-ஷபானா இருவரும் தங்களுடைய கேரியரில்ல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஷபானா தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதே சேனலில் ஆரியன் கதாநாயகனாக நடிப்பதற்காக புத்தம்புது சீரியலில் வாய்ப்பு பெற்றிருக்கிறார். இவருக்கு ஜோடியாக மோக் ஷிதா கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த புத்தம் புது சீரியல் பிரபல தெலுங்கு சீரியல் ஆன ‘ரத்தமா குத்துரு’ என்ற சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த சீரியல் தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்ததால் தமிழிலும் ஹிட் அடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த சீரியலில் அம்மா-மகள் சென்டிமென்ட் அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதில் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த மூத்த நடிகை அர்ச்சனா சீரியலுக்கு வலு சேர்க்கும் விதத்தில் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும் இந்த சீரியலில் ஆரியன் உடன் விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் பிரபலங்களான காயத்ரி, சுபத்ரா, பிரனிகா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஜீ தமிழில் ஒரு காலத்தில் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்த செம்பருத்தி சீரியல் கதாநாயகன் விலகிய காரணத்தால் கடந்த சில மாதமாகவே டல் அடித்துக் கொண்டிருப்பதால், மனைவி ஷபானா விட்டதை கணவர் ஆரியன் பிடிக்க களமிறங்கியுள்ளார். அவரது முயற்சி வெற்றி பெறும் என சின்னத்திரை ரசிகர்கள் யூகித்துள்ளனர்.

Continue Reading
To Top