மகளுடன் காதலியை ஏற்றுக்கொள்ளும் எழில்.. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பொறந்திருக்கு

விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படப் போகின்றன. அந்த விதமாக அமிர்தா தன்னுடைய பிறந்தநாளுக்கு தன் அம்மாவை வரச் சொல்லி இருப்பதாகவும், அன்று எழிலுக்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இதனைக் கேட்ட எழில் தன் நண்பனிடம் அமிர்தா அவர்கள் அம்மாவிடம் தன்னைப் பற்றித்தான் பேச அழைத்து இருப்பார் என்று கூறி குஷியாக இருந்தார்.

அதேபோல் அமிர்தாவின் பிறந்தநாள் அன்று அவரின் அம்மாவையும் சந்தித்தார் எழில். மேலும் எழிலுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதாக கூறிய அமிர்தா, திகைப்பில் ஆழ்த்தும் அளவிற்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார். அதில் தனது குழந்தையை அறிமுகப்படுத்தி சர்ப்ரைஸ் என்ற பெயரில் அவர் கொடுத்தது எழிலுக்கு பேரிடியாக இருந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத எழில் அதிர்ச்சியில் உறைந்து போனார். இதனைத் தன் நண்பரிடம் கூறி எழில் புலம்பிக் கொண்டிருந்தார். மேலும் அமிர்தாவை இன்னும் காதலிப்பதாகவும் அவரது குழந்தையையும் சேர்த்து ஏற்றுக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இதைக் கேட்ட எழிலின் நண்பர் ஆடிப்போனார்.

மேலும் பைத்தியமா நீ, ஏற்கனவே திருமணமான பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்ற, இப்ப அவளுக்கு ஒரு குழந்தையும் இருக்க, இருந்தும் அவளைத்தான் விரும்புகிறேன் திருமணம் செய்யப்போகிறேன் என்று சொல்கிறாயே நீ என்ன தியாகியா! என்று வார்த்தைகளால் வறுத்து எடுத்தார் எழிலின் நண்பர்.

ஆனால் எழில், நான் திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை விரும்பவில்லை. கணவனை இழந்து தனியாக தவிக்கும் பெண்ணிற்கு தான் வாழ்வு தர போகிறேன். இதில் அப்படி ஒன்றும் தவறு இல்லை என்று சாமர்த்தியமாக பேசினார்.

இவ்வாறு எழில் ஒரு புரட்சி கதாநாயகனாக மாறி அமிர்தாவிற்கும் அவன் குழந்தைக்கும் ஒரு அன்பான குடும்பத்தை அவன் மூலமாக ஏற்படுத்தித் தந்து சீரியலை ஒரு புரட்சிப் பாதைக்கு இனி வழி நடத்திச் செல்லலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க எழில் உடைய தந்தை கோபி கல்லூரி காதலி ராதிகாவிற்க்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருக்கும் நிலையில் மனைவியை விட்டுவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார். இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் குழந்தையுடன் இருக்கும் தாயை அப்பனும் மகனும் சுற்றி சுற்றி காதலித்து கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்