புதன்கிழமை, நவம்பர் 6, 2024

ராதிகாவின் அம்மாவை எச்சரித்த கோபியின் தந்தை.. அதிர்ந்து போகும் ராதிகா, கோபி

விஜய் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போதைய கதைப்போக்கில் கூடுதல் சுவாரசியம் என்று இந்த சீரியல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த வாரத்துக்கான பரபரப்பான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் பாக்கியா புருஷன் கோபி பூக்கடையில் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டிருக்கிறார். எதேச்சையாக அங்கு வரும் கோபியின் அப்பா அதை பார்க்கிறார்.

யாருக்காக இவன் பூ வாங்கிக் கொண்டு இருக்கிறான் என்று யோசித்துக்கொண்டே கோபியை பின்தொடர்ந்து பார்க்கிறார். அப்பொழுது கோபி ராதிகாவுடன் காரில் ஏறி செல்வதைப் பார்த்து கோபம் அடைகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கோபியின் அப்பா நேராக ராதிகாவின் வீட்டுக்கு செல்கிறார். அங்கு ராதிகாவின் அம்மாவிடம் உங்க பொண்ணுக்கு என் பையனுடன் என்ன பழக்கம். இனிமேல் என் பையனுடன் பேசுவதோ காரில் ஊர் சுற்றுவதோ இருக்கக் கூடாது உங்க பொண்ணு கிட்ட சொல்லி வையுங்கள் என்று எச்சரித்து விட்டு செல்கிறார்.

இதனால் அதிரும் ராதிகாவின் அம்மா கவலையுடன் இருக்கிறார். அப்பொழுது அங்கு வரும் கோபியிடம் இனி இந்த வீட்டுக்கு வராதீங்க, என் பொண்ண விட்டுடுங்க என்று கூறுகிறார். இதனால் கோபி மற்றும் ராதிகா இருவரும் செய்வதறியாது நிற்கின்றனர்.

வரும் வாரத்தில் சீரியலில் தன் அப்பா தான் இப்படி மிரட்டி இருப்பார் என்று தெரியவந்தால் கோபி ராதிகாவுக்கு சாதகமாக முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் ராதிகாவுக்கு பாக்யாவின் புருஷன்தான் கோபி என்ற உண்மையும் விரைவில் தெரியவரும். இதன் மூலம் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக நகரும் என்று தெரிகிறது.

- Advertisement -spot_img

Trending News