சென்னை: நடன புயல் பிரபுதேவா நடித்து வரும் புதுப்படத்தில் ‘பாகுபலி’ நடிகர் இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் ‘யங் மங் சங்’ திரைப்படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடிக்கும் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபுதேவாவுக்கு வில்லனாக ‘பாகுபலி’ புகழ் காலக்கேயா பிரபாகரன் நடிக்கவிருக்கிறார்.

‘பாகுபலி’ காலக்கேய அரசராக நடித்த பிரபாகரன் இப்படத்தில் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமாகியிருப்பதாக இயக்குனர் அர்ஜுன் தெரிவித்துள்ளார். மேலும், இப்படம் 1970-1980களில் நடக்கும் கதையை சித்திரிக்கும் வகையில் உருவாகி வரும் ‘யங் மங் சங்’ திரைப்படம் பிரபல குங்ஃபூ கலைஞர் புரூஸ்லீ போன்று தனது மகன் குங்ஃபூ கலைஞராக வேண்டும் என்று விரும்பி மகனை குங்ஃபூ கலை பயின்று வர சீனாவுக்கு அனுப்புகிறார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பும் மகன், அங்குள்ள பிரச்சனையை தீர்ப்பது போன்ற கதைக் களத்தில் இப்படம் உருவாகவிருப்பதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதில் பிரபுதேவாவின் தந்தையாக பிரபல இயக்குனர் தங்கர் பச்சான் நடிக்கிறார். மேலும், ஆர்.ஜே.பாலாஜி, அஸ்வின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரித்து வருகிறார்.