Baahubali2-SSRajamouli
Baahubali

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தை ஒட்டுமொத்த இந்திய சினிமாவே கொண்டாடி வருகின்றனர். இந்த படம் இரண்டாம் வாரத்தில் ஒவ்வொரு திரையரங்கிலும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் இந்த முழு பிரம்மாண்ட படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல்கள் இதோ,

பாகுபலி

  • இந்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 400 கோடி
  • உலகளவில் இந்த படத்துக்கு வந்த முழு வசூல் ரூ. 615 கோடி
  • இந்தியாவில் மட்டும் ரூ. 584 கோடி
  • இந்த படம் 635 நாட்கள் தயாராகி இருக்கிறது.
  • இரண்டு படங்களுக்கும் சேர்த்து 3000 மக்கள் பணிபுரிந்துள்ளனர்.
  • 50,000 அடிக்கு பாகுபலி போஸ்டரை தயார் செய்து கின்னஸில் இடம்பெற்றது.
  • கலை, செட் வடிவமைப்பு, கிராபிக்ஸ் போன்ற விஷயங்களுக்கு மட்டும் 800க்கும் அதிகமானோர் பணிபுரிந்துள்ளனர்.
  • பிரபாஸ் உடலமைப்பு பெற பயன்படுத்திய உடற்பயிற்சி சாதணங்கள் மற்றும் உதவியாளர்கள் செலவு என ரூ. 1.5 கோடி
  • பிரபாஸ், ராணா இருவருமே 100 கிலோவுக்கு மேல் உடலை ஏற்றியுள்ளனர்.
  • பிரபாஸ் பிட்டான உடலமைப்பு பெற தினமும் 40 முட்டைகள் சாப்பிட்டிருக்கிறார்.
  • 2000 யானைகள் மற்றும் சண்டை பயிற்சி நிபுணர்கள் முதல் பாகத்திற்காக பணிபுரிந்துள்ளனர்.
  • முதல் பாகத்திற்கு ரூ. 20 கோடி சம்பளம் பெற்று அதிக சம்பளம் பெற்ற தெலுங்கு நடிகர் என்ற பெருமைக்குரியவர்.
  • முதல் பாகம் இந்தியாவில் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
  • BBC ஆவணப்பட நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம்.

பாகுபலி 2

  • 24 மணி நேரத்தில் 50 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்த டிரைலர். இந்திய பட டிரைலர்களில் அதிக பார்வையாளர்கள் பெற்றது என்ற பெருமைக்குறியது.
  • 9000க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.
  • இந்த படத்தில் இடம்பெற்ற கிளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் ரூ. 30 கோடி செலவாகியுள்ளது.
  • காட்சிகள் வெளியாகிடுமோ என்ற பயத்தில் ராஜமௌலி 4 கிளைமேக்ஸ் காட்சிகளை இயக்கியிருக்கிறார்.
  • டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த 24 மணி நேரத்தில் 1 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
  • பாகுபலி ரிலீசுக்கு பின் பாகுபலி Thali என்ற உணவு ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • Jurassic World படத்தில் பணியாற்றிய அனைவரும் இப்படத்திற்கான VFX வேலைகள் செய்துள்ளனர்.
  • பிரபாஸின் கடின உழைப்பிற்காக அவருக்கு பாகுபலி கவசத்தை பரிசலித்துள்ளார் ராஜமௌலி.