Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலி பற்றிய ரகசியத்தை வெளியிட்ட ராஜமௌலி?
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளிவந்த படம் பாகுபலி-2. இந்த படம் மிக பெரிய வெற்றியையும் பிரம்மாண்டமான சாதனைகளையும் படைத்து சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி பாகுபலி பற்றிய ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது,
நானும் பிரபாஸும் 10 ஆண்டுகளுக்கு முன்னு சேர்ந்து பணியாற்றியுள்ளோம். அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளோம் நானும் பிரபாஸும் சேர்ந்தால் மணிக்கணக்கில் பேசுவோம், ஏன் இரவு முழுக்க கூட பேசுவோம். பாகுபலி பற்றி மட்டுமில்லாமல் படம் எடுப்பது போன்றவைகள் பற்றியும் பேசுவோம்.
பாகுபலிக்காக பிரபாஸிடம் ஒன்றரை ஆண்டுகள் டேட்ஸ் கேட்டேன், ஆனால் அவர் சிரித்துக்கொண்டே இந்த படத்தை ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க முடியாது என மூன்றரை ஆண்டுகள் ஒதுக்கினார்.
மேலும் இந்த படத்திற்காக அனுஷ்கா, ரம்யா, சத்யராஜ் ஆகியோர் பொருத்தமாக இருப்பார்கள் என்பதால் அவர்களை தேர்வு செய்தோம். ஆனால் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸுக்காகவே மட்டுமே எழுதப்பட்டது எனக் கூறினார் ராஜமௌலி.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
