பாகுபலி, பாகுபலி 2 படங்களின் மூலமாக மக்களில் பெரும் வரவேற்பை பெற்ற நாயகனாக பிரபாஸ் மாறினார். மேலும் அனுஷ்காவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

அவரின் அடுத்த படம் என்ன என்ற கேள்வி எழுந்ததுமே, சாஹோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை திணறவைத்தது. இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் துபாய், அபுதாபியில் நேற்று ஆரம்பமானது.

இதுபற்றி இயக்குனர் சுஜீத், பிரபாஸ் ஷுட்டிங்கை தொடங்கிவிட்டார். படப்பிடிப்புகள் அடுத்த மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து நடைபெறும். சண்டைக்காட்சிகள் அபுதாபியின் உயரமான கட்டிடங்களிலும், ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெறுகிறது. அவர் நடிக்கும் ஆக்சன் சீன்கள் இதுவரை சினிமாவில் பார்க்காததாக இருக்கும்.Prabhas-Baahubali

படத்திற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் பாதி தொகை ஆக்சன் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கென்னி பேட்ஸ் என்ற சண்டை பயிற்சியாளர் பணியாற்றுகிறார்.

இவர் ஏற்கனவே டை ஹார்ட், டிரான்ஸ்பார்மர்ஸ் போன்ற படங்களில் திறமையை காட்டியவர் என கூறியுள்ளார்.