ராஜமௌலியின் பாகுபலி 2 படம் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. ரூ. 1500 மேல் வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் இருக்கிறது.

இப்பட வசூல் சாதனை முறியடிக்கும் வகையில் அமீர்கானின் தங்கல் படம் சீனாவில் வசூல் வேட்டை நடத்துகிறது.

இந்நிலையில் பாகுபலி 2 படத்தை இந்த வருட கடைசியில் சீனாவில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர். இப்பட முதல் பாகம் சீனாவில் வெளியாகி சுமார் 7 மில்லியன் டாலர்களை மட்டுமே வசூலித்தது. இதனால் நிறைய பிளான் செய்து பாகுபலி 2 படத்தை படக்குழு அங்கு வெளியிட முடிவு செய்துள்ளனர்.