ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஆசை படமாக மாறிவிட்டது பாகுபலி 2. எத்தனை முறை பார்த்தாலும் ரசிகர்களுக்கு சலித்து போகவில்லை. படத்தை குறித்தும் பிரபல இயக்குனர்கள் தங்களது கருத்தை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் பாகுபலி 2 படம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அவர், பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது மிகவும் ஆரோக்கியமான விஷயம் தான் சினிமாவுக்கு, அதற்காக அவர்கள் நிறைய உழைத்திருக்கிறார்கள்.

ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள். நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது என்றார்.