பாகுபலி வெற்றி இந்திய சினிமாவையே அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றது. இதை தொடர்ந்து அடுத்த மாதம் பாகுபலி-2 திரைக்கு வருகின்றது.

இப்படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளிவர சமூக வலைத்தளங்களில் பல சாதனைகளை இவை நிகழ்த்தி வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக்குழுவிடம் மூன்றாம் பாகம் வருமா? என கேட்டனர்.

அதற்கு படக்குழுவினர்கள் ‘மூன்றாம் பாகம் என்று சொல்ல முடியாது, ஆனால், பாகுபலியில் உள்ள ஒரு கதாபாத்திரத்தை வைத்து வேறு ஒரு படம் வரலாம்’ என்று கூறினார்கள்.