பாகுபலி 2 இந்தியா முழுவதும் சுமார் 6000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் நாள் வசூல் 100 கோடி ரூபாய்க்கும் மேல் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சென்னை பகுதி வசூல் விவரங்களை பாப்போம்.

முதல் நாளில் சென்னையில் மட்டும் 91.4 லட்சம் ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது, இது இளையதளபதி விஜய் நடிப்பில் சென்ற வருடம் வந்த தெறி படத்தின் முதல் நாள் சென்னை வசூலை விட 10 லட்சம் ரூபாய் குறைவு.

டாப் தமிழ் ஹீரோக்களின் படங்கள் அளவிற்கு பாகுபலி 2 வசூல் ஈட்டுவதால் பலரும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.