Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாகுபலி ஸ்டார் நடிகர் பிரபாஸ் பற்றி பலரும் அறியாத 15 உண்மைகள்!
தெலுங்கு சினிமா டார்லிங்காக இருந்த நடிகர் பிரபாஸ் பாகுபலி முதல் பாகத்தின் வெளியீட்டுக்கு பிறகு தென்னிந்தியாவின் டார்லிங் ஆனார். பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவின் டார்லிங் நடிகராக உருமாறி இருக்கிறார். ஒரே படத்தின் வெற்றியின் மூலம் 30 கோடி ஊதியம் பெரும் நடிகராக மாறியுள்ளார்.
இவ்வாளவு பெரிய தொகை ஊதியமாக இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணிவிட கூடிய அளவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி, நடிகர் பிரபாஸ் பற்றி பலரும் அறியாத சில உண்மைகளை இங்கு காணலாம்…
நடிகர் பிரபாஸின் முழு பெயர் வெங்கட சத்யநாராயண பிரபாஸ் ராஜு உப்பலபத்தி!
பிரபுதேவா இயக்கிய ஆக்ஷன் ஜாக்சன் படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருப்பார் பிரபாஸ்.
பாங்காக்கில் உள்ள மேடமே துஷாட்ஸ் எனும் வேக்ஸ் சிலை மியூசியத்தில் இடம்பெற்ற ஒரே தென்னிந்தியா நடிகர் பிரபாஸ் தான். இவரது பாகுபலி உருவ பொம்மை அங்கு நிறுவப்பட்டுள்ளது.
பிரபாஸின் தந்தை சூர்யநாராயணா ராஜு ஒரு தயாரிப்பாளர். இவரது மாமா கிருஷ்ணம் ராஜு டோலிவுட் நடிகர்.
ஆரம்பத்தில் நடிகர் பிரபாஸ், ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஆகவேண்டும் என்று தான் விரும்பினார். எதிர்பாராத விதமாக தான் இவர் நடிக்க வந்தார்.
பிரபாசுக்கு பட்டர் சிக்கன், சிக்கன் பிரியாணி என்றால் மிகவும் பிரியம். ஒருவேளை இதற்காக தான் ஹோட்டல் உரிமையாளர் ஆக நினைத்தாரோ…?!!?
பிரபாஸ் இந்தியாவின் முன்னணி இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியின் தீவிர ரசிகர். 3 இடியட்ஸ், முன்னா பாய் எம்.பி.பி.எஸ் போன்ற படங்களை 20 தடவைகளுக்கும் மேலாக பார்த்துள்ளாராம்.
பாகுபலி நடிக்க கதை கேட்டு ஒப்புக்கொண்ட நாள் முதல், பிரபாஸ் வேறு எந்த கதைகளையும் கேட்கவும் இல்லை, நடிக்கவும் முற்படவில்லை என கூறப்படுகிறது. தனக்கு என்ன சம்பளம் என்று கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.
பாகுபலி தோற்றத்திற்காக உழைக்க, தனது வீட்டில் ஒரு வாலிபால் கோர்ட் கட்டி இருந்தார் பிரபாஸ்.
