fbpx
Connect with us

Cinemapettai

பாகுபலியில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் பாலியல் சர்ச்சையில் கைது! அதிர்ச்சி தகவல்.!

baahubali

News | செய்திகள்

பாகுபலியில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் பாலியல் சர்ச்சையில் கைது! அதிர்ச்சி தகவல்.!

200 கோடி ரூபாய் செலவில் மிகப்பிரமாண்டமாய் உருவாகி, உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில், நான்கைந்துமொழிகளில்  ஒரேநாளில் வௌி வந்த  திரைப்படம் பாகுபலி.

மகதீரா, நான் ஈ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை தந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில், பலத்த எதிர்பார்ப்புகளை எகிறவைத்தது பாகுபலி.

பாகுபலி என்ற இந்தியாவின் பிரம்மாண்ட செலவு செய்யப்பட்ட சினிமாவை, கைகொட்டி ரசித்துப் பார்வையிட்ட ரசிகர்கள் அதிகம்.

baahubali

மிகக் கூடுதலான செலவு செய்து எடுக்கப்பட்ட படம். கலை இயக்கத்தை மிகச் சரியாக உபயோகித்த சினிமா. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுமான வரை பிரம்மாண்டமும், பார்வைக்கு உருத்தாமலும் செய்யப்பட்ட படம்.

என புனையப்பட்டதொரு உலகம், முடியாட்சி மன்னர் குலத்தில் நடக்கும் அதிகாரப் போட்டியின் முதல் பாகமாக வந்திருந்தது  பாகுபலி. இணையத்தில் தேடினால் இன்னும் பல பிரம்மாண்டங்கள் செய்தியாகக் கிடைக்கும்.

baahubali

உலக சினிமாவில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் பாகுபலி.

இப்படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் இன்னமும் பார்தோரின் மனதில் நிற்கும். இதில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் வேங்கடேச பிரசாத்.

இவர் ஹைதாரபாத்திலுள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஐமாக்ஸில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

baahubali

அங்கு வேலைசெய்யும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இவர் தற்போது அப்பெண் அளித்த புகாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலிஸ் விசாரணையில் அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இதே போல தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் வெங்டடேச பிரசாத் 7 வருடங்களாக அப்பெண்ணுடன் தொடர்பு வைத்த போதிலும். அப்பெண் இருமுறை கருவுற்றிருந்தாராம்.

இதனால் பிரசாத் அப்பெண்ணை இருமுறையும் அக்கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளார். இதனால் கைது செய்ப்பட்டதோடு அவர் தீவிர விசாரணையில் உள்ளாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top